ஜனாஸா விடயத்தில் முஸ்லிம்களை சோர்வடையச் செய்துள்ள அரசாங்கத்தின் நிலைப்பாடு
கொரோனாவினால் இறக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய வேண்டும் என்ற விடயத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு முஸ்லிம்களை மனச்சோர்வடைய செய்துள்ளதாக இந்திய இணையத்தளமொன்று குறிப்பிட்டுள்ளது.
புதைகுழிகள் நிலத்தடி நீரை மாசுபடுத்தாது, பொது சுகாதாரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தாது என்ற விஞ்ஞான வாதத்துடன் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து வரும் முஸ்லிம் தரப்பினர் தற்போது உதவியற்றவர்களாக உள்ளனர்.
ஒரு முஸ்லிமின் ஜனாஸாவை தகனம் செய்வது பாவம் என்று முஸ்லிம்கள் கருதுகின்றனர்.
இந்த நிலையில் அரசாங்கத்தின் 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுபபினர்களை திருப்திப்படுத்த பிரதமர் மஹிந்த ராஜபக்சவும், அவரது சகோதரர் பசில் ராஜபக்சவும் குழு ஒன்றை அமைத்து அதன் பரிந்துரையும் பெறப்பட்டுள்ளது.
எனினும் தேசியவாதக்கொள்கையை கொண்ட ஜனாதிபதி கோட்டாபாயவின் தலைமையிலான தரப்பு இதனை ஏற்றுக் கொள்ள மறுத்து வருவதாக இந்திய இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
இன்று வரை இந்த விடயத்தில் தீர்வுகள் அறிவிக்கப்படவில்லை.இந்தநிலையில் குறித்த பிரச்சினை ஒரு அரசியல் நிலைப்பாட்டில் இருந்து கவனிக்கப்படுகிறது என்பதும் விஞ்ஞான நிலைப்பாட்டில் இருந்து அல்ல என்பதும் தெளிவாக தெரிவதாக இந்திய இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.