இலங்கை வெளியிட்ட கருத்தை முற்றாக நிராகரிக்கும் இந்திய அரசாங்கம்
இலங்கை அரசாங்கத்தின் அறிவிப்பால் தாம் ஆச்சரியம் அடைந்துள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் கடந்த வாரம் தெரிவித்திருந்தது, இந்த தகவல் தொடர்பில் அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிடுகையில், கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய திட்டத்திற்காக இலங்கை அரசாங்கம், இந்தியாவின் அதானி நிறுவனத்துடன் நேரடி தொடர்புகளில் உள்ளதாக இந்திய அரசாங்கத்தின் சார்பில் உறுதிப்படுத்தினார்.
புதுடில்லியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அந்நாட்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் குறிப்பிடுகையில்,
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய அபிவிருத்தி தொடர்பில் அதானி நிறுவனம் வழங்கிய யோசனையை, இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் உறுதிப்படுத்தியதாக இலங்கை வெளியிட்ட கருத்து உண்மை இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்தோடு, இத்திட்டம் தொடர்பில் அதானி நிறுவனத்துடன், இலங்கை அரசாங்கம் நேரடியாக தொடர்புப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam
