அரசாங்கம் அரச சொத்துக்களை வேகமாக விற்பனை செய்து வருகின்றது! - மாயந்த திஸாநாயக்க
அரசாங்கம் அரச சொத்துக்களை வேகமாக விற்பனை செய்து வருகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாயந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஒரு அங்குல காணியையும், சொத்துக்களையும் விற்பனை செய்வதில்லை என சூளுரைத்து ஆட்சி பீடம் ஏறியவர்கள் இன்று மிக வேகமாக சொத்துக்களை விற்பனை செய்து வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் நாளுக்கு நாள் பின்னடைவை எதிர்நோக்கி வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கம் விவசாயிகளுக்கு உரத்தை இலவசமாக வழங்குவதாக உறுதி மொழி கூறி ஆட்சி பீடம் ஏறியது எனவும் இன்று விவசாயிகள் பெரும் துயரத்தை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஹாவலி வலயம் மற்றும் மலையக விவசாயிகள் உரமின்றி பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கத்தின் மோசமான கொள்கைகளினால் பெரும்போகத்தில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது அரசாங்கத்தின் ஆட்சியில் உரப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும் எனவும் இலவசமாக உரம் வழங்கப்படும் எனவும் மாயந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 18 மணி நேரம் முன்
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri