அரசாங்கம் சீன ஆதரவு கொள்கைகளை பின்பற்றுகின்றது – எதிர்க்கட்சி
அரசாங்கம் சீன ஆதரவு கொள்கைகளை பின்பற்றி வருவதாக எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
சீன ஆதரவு கொள்கைகளை அமுல்படுத்துவதன் மூலம் இந்தியாவுடனான உறவுகளை அரசாங்கம் காயப்படுத்தியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல குற்றம் சுமத்தியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் சீனாவை மையப்படுத்திய கொள்கைகள் அமுல்படுத்தப்பட்டதாகவும் அதுவே தற்போதைய அரசாங்கமும் பின்பற்றி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எல்லையற்ற அடிப்படையில் அபிவிருத்தி பணிகளுக்கு சீனாவுடன் அரசாங்கம் தொடர்பு பேணி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கை மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டுள்ளதாகவும் இரண்டு நாடுகளும் பரஸ்பர அடிப்படையில் ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா இலங்கையின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தினால் அது பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.