கொவிட் தடுப்பூசியின் மூன்றாம் மாத்திரையை வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம்
கொவிட் தடுப்பூசியின் மூன்றாம் மாத்திரையை வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கொவிட் தடுப்பூசியின் இரண்டு மாத்திரைகள் ஏற்றப்பட்டவர்களுக்கு மூன்றாவது மாத்திரை ஒன்றையும் வழங்குவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகின்றது.
இந்த விடயம் குறித்து ஆராய்ந்து பார்க்குமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச, ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு மூன்றாவது மாத்திரை வழங்கப்படுமாயின் என்ன தடுப்பூசி வழங்குவது, உலகின் ஏனைய நாடுகள் இது தொடர்பில் எவ்வாறான நடைமுறையை பின்பற்றுகின்றது போன்ற விடயங்களை ஆராயுமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கொவிட்டை கட்டுப்படுத்துவதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கொவிட் தடுப்பூ குழுவின் கூட்டத்தில் பங்கேற்ற போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலில் கொவிட் தடுப்பூசியின் மூன்றாம் மாத்திரை மக்களுக்கு ஏற்றப்பட்டு வருவதாக அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா கனடாவின் கூட்டாளர் அல்ல... ரஷ்யாவைவிட மிகப்பெரிய அச்சுறுத்தல்: ஆய்வு முடிவுகள் News Lankasri
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam