அரசாங்கம் பிரதான பிரச்சினை ஒன்றை எதிர்நோக்கி வருகிறது - கெஹெலிய ரம்புக்வெல்ல
அரசாங்கம் எதிர்நோக்கி வரும் பிரதான பிரச்சினைக்கு தீர்வாகவே கொழும்பு துறைமுக நகருக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவழைக்க முயற்சித்து வருவதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
தேசிய அபிவிருத்தி மத்திய நிலையத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
நிறைவேற்று அதிகாரம், நாடாளுமன்றம் நீதிமன்றத்தை மீறி நாங்கள் செயற்படவில்லை. எந்த வகையிலும் இல்லை. கூறும் விடயங்கள் 200 வீதம் பொய்யானவை. துறைமுக நகர விசேட ஆணைக்குழு சட்டமூலம் அடிப்படையான அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஏற்புடையது என சட்டமா அதிபர் கூறியுள்ளதுடன் அதிகாரபூர்வமாக அரசாஙகத்திற்கும் அறிவித்துள்ளார்.
இதன் பின்னரே நாங்கள் அதனை முன்னெடுத்துச் சென்றோம். எமக்கு ஒரு பிரச்சினையுள்ளது. அதுதான் அந்நிய செலாவணி பிரச்சினை. டொலர் பிரச்சினை. இந்த பிரதான பிரச்சினையை தீர்க்கவே நாங்கள் வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவழைக்கின்றோம்.
இதனை தடுத்து, மக்கள் மீது சுமையை ஏற்றி, மிகவும் மோசமான யுகத்தை ஏற்படுத்தவும் அதன் மூலம் திருப்தியடையும் சிலர் முயற்சிப்பதாகவே நான் காண்கின்றேன் எனவும் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.
பெண்ணை பார்த்ததும் மயங்கிய மனோஜிற்கு பெண் வீட்டார் கொடுத்த ஷாக்.. சிறகடிக்க ஆசை சீரியல் புதிய புரொமோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam