நாட்டு மக்களை படுகுழிக்குள் தள்ளியுள்ள ராஜபக்ச அரசு! - மரிக்கார் குற்றச்சாட்டு
"ராஜபக்ச அரசானது நாட்டு மக்களைப் படுகுழிக்குள் தள்ளியுள்ளதுடன் வரிசையில் நிற்கும் நிலைமையையும் ஏற்படுத்தியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் (S.M Marikkar) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
"இந்த அரசின் ஆட்சியில், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் சீர்குலைந்துள்ளன.
விவசாயிகள் வீதியில் இறங்கிப் போராடும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ஏற்றுமதி முற்றுமுழுதாக அழிந்துள்ளது.
சோமாலியா போன்று எமது நாட்டையும் மாற்றியுள்ள இந்த அரசு, தற்போது விவசாயிகள்
விவசாயச் செய்கையை மேற்கொள்ள முடியாதளவு நாட்டை நாசமாக்கியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri