இதுவரை 3.6 ட்ரில்லியன் ரூபா பணத்தை அச்சிட்ட கோட்டாபய அரசாங்கம்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான தற்போதைய அரசாங்கம் இதுவரையில் 3.6 ட்ரில்லியன் ரூபா பணத்தை அச்சிட்டுள்ளது.
ருகுணு பல்கலைக்கழகத்தின் பொருளியல் விஞ்ஞான பீடத்தின் விரிவுரையாளர் கலாநிதி நந்தசிறி கிம்பியாஹெட்டி தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் தரவுகளை ஆராய்வதன் மூலம் இந்த புள்ளிவிவர தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2019ம் ஆண்டு மார்ச் மாதம் 27ம் திகதி முதல் 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் 17ம் திகதி வரையில் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைகளின் மூலம் இதுவரையில் அரசாங்கம் அச்சிட்டுள்ள பணப் பெறுமதியை அறிந்து கொள்ள முடியும் எனக் கலாநிதி நந்தசிறி சுட்டிக்காட்டியுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
