வாகன இறக்குமதியாளர்களின் அறிக்கைக்கு இதுவரையில் பதிலளிக்காத அரசாங்கம்
2021ஆம் ஆண்டு இறுதியில் வாகன இறக்குமதியை அனுமதிக்கும் நிலைமை தொடர்பில் ராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் விடுத்துள்ள அறிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர் மத்தியில் தமது கருத்தை வெளியிட்ட வாகன இறக்குமதியாளர்கள் சங்க செயலாளர் அரோஷ ரொட்ரிகோ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு எந்த இறக்குமதியும் அனுமதிக்கப்படாது. எனினும் இந்த ஆண்டு இறுதியில் நிலைமையை மதிப்பீடு செய்து இறக்குமதியை மீண்டும் ஆரம்பிக்க முடியும் என்று அமைச்சர் கப்ரால் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் அதற்கான பொறுப்பான பதில் இன்னும் கிடைக்கவில்லை என்று அரோஷ ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.
எனவே தமது சங்க உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை கருத்திற் கொண்டு ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை ஒன்றை எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 3 மணி நேரம் முன்
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan