ஈஸ்டர் தாக்குதல் குறித்த வெளிப்படுத்தல்களை உதாசீனம் செய்துள்ள அரசாங்கம்
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலான உண்மைகளை அம்பலப்படுத்துவதனை அரசாங்கம் உதாசீனம் செய்கின்றது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சமூக தொடர்பாடலக்கான தேசிய கத்தோலிக்க நிலையம் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.
உண்மையை வெளிப்படுத்தும் கடமையை அரசாங்கம் உதாசீனம் செய்வதாகக் குறிப்பிட்டுள்ளது.
இந்த அமைப்பானது கத்தோலிக்க பேராயர்கள் அமைப்பின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நீதி நிலைப்படுதல், தேசியப் பாதுகாப்பினை உறுதி செய்தல் என்பனவற்றை உறுதி செய்வதற்கான ஓர் திருப்பு முனையாக இந்த விசாரணைகள் அமையும் என சுட்டிக்காட்டியுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய மெய்யான குற்றவாளிகளை கண்டறியுமாறு வலியுறுத்தி வரும் சிவில் செயற்பாட்டாளர்களும் மத குருமார்களும் இலக்கு வைக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
உண்மையான குற்றவாளிகளை கண்டறிவதற்கான முனைப்புக்களை அரசாங்கம் எடுக்கத் தவறியுள்ளது என சமூகத் தொடர்பாடல்களுக்கான தேசிய கத்தோலிக்க நிலையம் தெரிவித்துள்ளது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 மணி நேரம் முன்

காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்.. கடை திறப்பு விழாவில் அதிர்ச்சி! வைரல் வீடியோ Cineulagam

துபாயில் சிறையில் இருந்து விடுதலையான 19 வயது பிரித்தானிய இளைஞர்: லண்டன் சாலையில் சோகம் News Lankasri
