சிறிதரன் வெளியிட்ட கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ள பிரதமர் அலுவலகம்
வடக்கில் உள்ள காணிகள் சீனாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படும் கூற்றை அரசாங்கம் மறுத்துள்ளது.
நெடுந்தீவில் 40 ஏக்கர் நிலமும் பழைய யாழ்ப்பாண அரச கட்டிடமும் சீனாவுக்கு விற்கப்பட இருப்பதாகத் தமிழ்த் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் கூறி இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நோக்கத்திற்காகவே விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ச அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ததாகவும் அவர் கூறியதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், பிரதமரின் அலுவலகம் இந்தக் கூற்றுக்களை மறுத்துள்ளது.
இந்தநிலையில் குற்றச்சாட்டுகளை விசாரித்தபோது, இந்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என்றும், நெடுந்தீவில் அல்லது பழைய யாழ்ப்பாணம் கச்சேரி கட்டிடத்தில் எந்த நிலத்தையும் எந்த வெளிநாட்டு நிறுவனத்திற்கும் விற்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அதிகாரிகளால் தமக்குத் தெரிவிக்கப்பட்டதாகப் பிரதமரின் ஒருங்கிணைப்பு செயலாளர் ஜி. காசிலிங்கம் ட்வீட் செய்துள்ளார்.
After inquiring into the allegations made by @TNAmediaoffice MP. Hon. Sritharan, I was informed by authorities that these allegations are absolutely FALSE and there are no moves to sell any land on the Delft Island or the old Jaffna Kachcheri building to any foreign company. #lka https://t.co/ny8R2pEC9U
— G. Cassilingham (@CassilingamG) July 6, 2021