அரசாங்கம் மக்களின் ஆணையை காட்டிக்கொடுத்து விட்டது: எதிர்க்கட்சித் தலைவர்
அரசாங்கம் ஏற்கனவே மக்களின் ஆணையை காட்டிக்கொடுத்து விட்டது எனவும் அரசாங்கம் செல்லும் இந்த அழிவான பயணத்தை ஐக்கிய மக்கள் சக்தியினால் மாத்திரமே பின்நோக்கி திருப்ப முடியும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
குருணாகல், இப்பாகமுவ நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற கமத்தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஆர்ப்பாட்டத்திற்கு முன்னர் ஹரியால கும்குக்கெட்டே அஹூகொடவில் அமைந்துள்ள சேர் ஜோன் கொத்தலாவலவின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்திய பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர்,
“சேர் ஜோன் கொத்தலாவல அன்று நாட்டின் விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக பாரிய பங்களிப்பை செய்தார். ஹரியால உள்ளிட்ட பிரதேசங்களில் விவசாய குடியேற்றங்களை ஏற்படுத்த அவர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்” எனக் கூறியுள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான நளின் பண்டார(Nalin Bandara), ஜே.சி.அலவத்துவ, துஷார இந்துனில்(Thushara Indunil) உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri