தேர்தலை இழுத்தடிக்கும் அரசாங்கத்தின் சதித்திட்டம்: எழுந்துள்ள கண்டனம்
மாகாண சபை முறைமை தொடர்பான விடயத்தில் தேர்தல் முறைமையை இழுத்தடிப்பது அரசாங்கத்தின் சதித் திட்டம் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நேற்று(09.08.2025) ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
“கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில், மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக கடந்த காலத்தில் எல்லை நிர்ணய குழு சில வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டு அவர்களின் அறிக்கைகளை பெற்று மாகாண சபை தேர்தலை நடத்துவதற்காக பல ஏற்பாடுகள் நடைபெற்றன.
அதிகார பரவலாக்கம்
2025ஆம் ஆண்டு மாகாண சபை தேர்தல் தொடர்பான பிரேரணைகள் முன்வைக்கப்பட்ட நிலையில், புதிய அரசாங்கம் மாகாண சபை தேர்தலை இந்த வருடம் நடத்தி விடக்கூடாது என்பதற்காக இழுத்தடிப்பு செய்கின்றதா என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றன.
ஒரு மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு மக்கள் பிரதிநிதிகள் எதிர்காலத்தில் மிகவும் சிறப்பாக சேவையாற்றுவதற்காக சிந்தித்து இருக்கின்ற நிலையில், குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அதிகார பரவலாக்கம் மற்றும் அதிகார பங்கீட்டுடன் சம்பந்தப்பட்ட இந்த மாகாண சபை முறைமை தேர்தல் விரைவாக நடத்தப்பட வேண்டும் என்பது வடக்கு கிழக்கு மக்களது பெரும் அவாவாக இருக்கின்றது.
தமிழ் மக்களின் அதிகார பங்கீடு அதிகார உரிமையோடு சம்பந்தப்பட்ட விடயத்தில் நீண்ட காலமாக உங்களுக்கு தெரியும் கிழக்கு மாகாண சபை பல வருடத்திற்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட்டன.
அதே போன்று வடக்கிலும் நடத்தப்பட்டது. ஆனால், மிகவும் விரைவாக மாகாண சபை தேர்தல் நடத்துவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி வெள்ளி, சக கிடாய் வாகன உற்சவம்




