மூன்று நாடுகளிடமிருந்து 215 கோடி டொலர் கடன் பெறும் அரசாங்கம்
இலங்கை அரசாங்கம் மூன்று நாடுகளிடமிருந்து சுமார் 215 கோடி அமெரிக்க டொலர்களை கடனாக பெற்றுக் கொள்ளத் திட்டமிட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியிடம் கையிருப்பில் உள்ள அந்நிய செலாவணித் தொகை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ள காரணத்தினால் இவ்வாறு அவசரமாக கடன் பெற்றுக்கொள்ள உள்ளது.
இதன்படி, சீனாவிடம் 150 கோடி அமெரிக்க டொலர்களையும், இந்தியாவிடம் 40 கோடி அமெரிக்க டொலர்களையும், பங்களாதேஷிடம் 25 கோடி அமெரிக்க டொலர்களையும் கடனாக பெற்றுக்கொள்ள உள்ளது.
இந்தியா மற்றும் பங்களாதேஷிடம் பெற்றுக்கொள்ளும் 65 கோடி அமெரிக்க டொலர் கடன் செலாவணி பரிமாற்ற அடிப்படையில் பெற்றுக் கொள்ளப்பட உள்ளது.
இந்தியாவிடமிருந்து இரண்டு கட்டங்களாக ஒன்பது மாதத்தில் மீள செலுத்தும் வகையில் கடன் பெற்றுக் கொள்ளப்பட உள்ளதுடன், பங்களாதேஷிடம் மூன்று கட்டங்களாக கடன் பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.
சீனாவிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட உள்ள 150 கோடி அமெரிக்க டொலர் கடன் நீண்ட கால அடிப்படையில் கிடைக்கப் பெறவுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 6 மணி நேரம் முன்

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
