தனது முடிவை இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பிற்கு அறிவித்த அரசாங்கம்
கோவிட் 19 இனால் உயிரிழக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய அனுமதிக்கும் முடிவு குறித்து இலங்கை இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் பொதுச் செயலகத்திற்கு நேற்று எழுத்துப்பூர்வமாக அறிவிக்க நடவடிக்கை எடுத்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோவிட் 19 மரணத்துக்கு உள்ளாவோரின் உடலங்களை கட்டாய தகனக் கொள்கையை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் அதனை மாற்றியமைக்க இலங்கை அரசாங்கம் முடிவு செய்தது.
இந்த முடிவை அமுல்படுத்தும் வர்த்தமானி அறிவிப்பு கடந்த புதன்கிழமை இரவு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி கையொப்பத்துடன் வெளியிடப்பட்டது.
முன்னதாக இலங்கை அரசாங்கத்தின் கட்டாய தகனக் கொள்கை குறித்து இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின்; பொதுச்செயலாளர் யூசெப் அல் ஒதமீன்இ ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உயர்மட்ட கூட்டத்தில் தமது கவலையை வெளியிட்டிருந்தார்.
கோவிட்டினால் இறப்போரை முஸ்லிம்கள் தங்கள் மத சடங்குகளின்படி அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அவர் இலங்கை அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்தார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் உறுப்பினர்களாக இருக்கும் நாடுகளில் 13 நாடுகள் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில் உறுப்புரிமைக்கொண்டுள்ளன.
பிரித்தானியா தலைமையிலான நாடுகளின் முக்கிய குழுவினரால் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்படப்போகும் தீர்மானத்தை தோற்கடிக்க இலங்கைக்கு இந்த நாடுகளின் ஆதரவு மிக முக்கியமானது.
இந்தநிலையிலேயே இலங்கையின் கோவிட் 19 தகன முடிவு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.





சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam
