சிறுமியொருவர் சடலமாக மீட்பு! தாய் இல்லாத போது நேர்ந்துள்ள கொடூரம் (Photo)
நுவரெலியா - கந்தப்பளை, ஹைபொரஸ்ட் இலக்கம் ஒன்று தோட்டத்தின் தனிவீட்டு குடியிருப்பு பகுதியிலிருந்து இன்று சிறுமியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வீட்டு வாசல் பகுதியில் உள்ள கூரை கம்பத்தில் போடப்பட்டிருந்த சேலையில் கழுத்து இறுகியவாறு சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஹைபொரஸ்ட் இலக்கம் ஒன்று தோட்ட பாடசாலையில் தரம் மூன்றில் கல்வி கற்கும் இராஜமாணிக்கம் விசாந்தினி என்ற சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
தாயாரின் தகவல்
“தான் வீட்டிலில்லாத சந்தர்ப்பத்தில் சிறுமி வீட்டு முற்றத்தில் விளையாடி கொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், தான் வந்து பார்த்த போது சிறுமியின் கழுத்து சேலையில் இறுகியிருந்ததை அவதானித்து அயலவர்களின் உதவியுடன் அவரை ஹைபொரஸ்ட் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும்” சிறுமியின் தாய் தெரிவித்துள்ளார்.
சிறுமி உயிரிழப்பு
எனினும் சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனைக்காக சிறுமியின் சடலம் இன்று காலை நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஹைபொரஸ்ட் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 9 மணி நேரம் முன்

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
