துப்பாக்கி குறி தவறி சாலையில் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்ட சிறுமி
அமெரிக்காவின் சிகாகோ நகர மருத்துவ பரிசோதகர் அலுவலகம் அருகில் சாலையில் 8 வயது சிறுமியொருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி தமது பாதுகாவலருடன் நடந்து சென்று கொண்டிருந்த போது கடையொன்றில் இருந்து வெளியேறிய இளைஞரை, அடையாளம் தெரியாதவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதன்போது குறி தவறி அந்த குண்டு சிறுமியின் தலையில் பாய்ந்துள்ளதுடன், மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் சிறுமி உயிரிழந்துள்ளார்.
மேலும் குறித்த இளைஞர் முதுகில் சுடப்பட்ட நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த துப்பாக்கி தாக்குதலை நடத்தியவர் தப்பியோடியுள்ளதாகவும், இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து பொலிஸ் கண்காணிப்பாளர் டேவிட் பிரவுன் ‘‘குற்றவாளி நீதியின் முன் நிறுத்தப்படும் வரை ஓய்வெடுக்க போவதில்லை.
8 வயது சிறுமி மெலிசாவின் பரிதாபமான இந்த கொலை எங்கள் நகரத்தை உலுக்கி விட்டது. ஒரு குழந்தையின் உயிர் பறிபோகும் போது ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. அந்த குடும்பத்தின் துயரத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை’’ என்று தமது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.