செல்வந்த - ஏழை நாடுகளுக்கு இடையிலான இடைவெளி அதிகரிப்பு: ஐ. நா. அறிக்கை தெரிவிப்பு
பல நாடுகள் ஏற்றுக் கொண்ட திட்டங்கள் கடந்த காலங்களில் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளாகவே நீடிப்பதன் காரணமாக செல்வந்த மற்றும் ஏழை நாடுகளுக்கு இடையிலான இடைவெளி மேலும் விரிவடைந்து செல்வதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.
பொருளாதார சவால்கள் - பூகோலவியல் அரசியல் அழுத்தங்கள்
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா கூறுகையில், உலகளாவிய வளர்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருந்தபோதிலும் ஈரான் போர் தற்போது உலகப் பொருளாதாரத்தின் எதிர்காலத்தை இருளாக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
பூகோலவியல் அரசியல் பதற்றங்கள் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் நிதியுதவிக்கான போராட்டங்களைச் சிக்கலாக்குவதாக பொருளாதார மற்றும் சமூக விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் இணைச் செயலாளர் லி ஜுன்ஹுவா தெரிவித்துள்ளார்.

பூகோலவியல் அரசியல் காரணிகள் பொருளாதார உறவுகளையும் நிதிக் கொள்கைகளையும் பெருகிய முறையில் வடிவமைத்து வருவதால் சர்வதேச ஒத்துழைப்பிற்கு இது மிகவும் ஆபத்தான காலமாகும் என்று அவர் கூறினார்.
உயர்ந்து வரும் வர்த்தகத் தடைகள் மற்றும் மீண்டும் மீண்டும் ஏற்படும் காலநிலை மாற்றங்கள் இந்த இடைவெளி அதிகரிப்பதற்கு காரணங்களாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
செவில் அர்ப்பணிப்பு- நிதி நெருக்கடி
கடந்த ஆண்டு செவில் நகரில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் அமெரிக்காவைத் தவிர உலகின் பெரும்பாலான நாடுகளின் தலைவர்கள் அபிவிருத்திக்காக ஆண்டுதோறும் தேவைப்படும் 4 டிரில்லியன் டாலர் நிதி இடைவெளியை நிரப்புவதை நோக்கமாகக் கொண்ட 'செவில் அர்ப்பணிப்பை' ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர்.
• அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் முதலீடுகளை அதிகரித்தல்.
• உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச நிதி கட்டமைப்பை சீர்திருத்துதல். ஆகியவற்றை இத்திட்டம் வலியுறுத்தியது.
எவ்வாறாயினும் சர்வதேச நாணய நிதியம் ஏழை நாடுகளை விட செல்வந்த நாடுகளுக்கே அதிக பலன்களை வழங்கியுள்ளதாகவும் குறிப்பாக கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உலக வங்கியின் பணி தோல்வியடைந்துள்ளதால் பல நாடுகள் கடும் கடன் சுமைக்கு ஆளாகியுள்ளதாகவும் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்தார்.

மேலும் ட்ரம்ப் நிர்வாகத்தினால் விதிக்கப்பட்ட வரிகள் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
உலகின் ஏழ்மையான நாடுகளிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான சராசரி வரிகள் 2025-இல் 9 வீதம் முதல் 28 வீதமாக உயர்ந்துள்ளதுடன் சீனா தவிர்ந்த ஏனைய அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கான சராசரி வரிகள் 2 வீதம் முதல் 19 ஆக அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam