சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்காது
தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டால், அதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அங்கம் வகிக்காது என அந்த கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
பதுளையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அந்த மாநாட்டின் மேடையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இருந்துள்ளார்.
தேசிய அரசாங்கம் ஒன்றில் அமைச்சு பதவிகள் மற்றும் பொறுப்புகளை பெற்றுக்கொள்வதில்லை என்பது சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு எனவும் தயாசிறி கூறியுள்ளார்.
தயாசிறி ஜயசேகர கடந்த நல்லாட்சி தேசிய அரசாங்கத்தில் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்த அனுபவமுள்ளவர்.
2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் பின்னர் உருவாக்கப்பட்ட நல்லாட்சி தேசிய அரசாங்கம் 2018 ஆம் ஆண்டு கவிழ்ந்தது. அந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி விலகிக்கொண்டது.