மைத்திரியுடன் விசேட பேச்சுவார்த்தையை நடத்திய சுதந்திரக்கட்சியின் எம்.பிக்கள்
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கடந்த வியாழக்கிழமை, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் விசேட பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியுள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தையில், அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான யோசனை குறித்தே விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
அமைச்சர் கம்மன்பிலவுக்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டு வரவுள்ள இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
அரசாங்கத்தின் கூட்டணி கட்சி என்ற வகையிலும் அமைச்சரவையின் உறுப்பினர் என்ற வகையிலும் அமைச்சர் கம்மன்பிலவுக்கு ஆதரவாக இந்த சந்தர்ப்பத்தில் குரல் கொடுக்க வேண்டும் என சுதந்திரக் கட்சி கருதுவதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! 21 மணி நேரம் முன்
குடும்பத்திற்கு எதிராக மீனா செய்த காரியம், கோபத்தில் கடுமையாக திட்டிய ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
மருத்துவமனைக்கு வந்த நந்தினி, ரேணுகா பார்த்த ஷாக்கிங் விஷயம், கெஞ்சும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam