ராஜிதவுக்கு எதிரான மோசடி வழக்கு மீளப்பெறப்பட்டது
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிரான மோசடி வழக்கு மீளப்பெறப்பட்டுள்ளது.
ராஜித சேனாரத்ன கடந்த 2010 முதல் 2015 வரை, மகிந்தவின் இரண்டாம் தவணை பதவிக்காலத்தில் மீன்பிடித்துறை, நீரியல் வளங்கள் அமைச்சராக பணியாற்றியிருந்தார்.
ராஜிதவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
பதவிக்காலத்தில், அவரது செயலாளர் ஒருவரின் பெயரில் சீனாவிலிருந்து 8 கப்பல்களை தருவித்துள்ளதாகவும், கறுப்பு பட்டியலிலுள்ள நிறவனம் ஒன்றுக்கு கொழும்பு - முகத்துவாரம் மீன்பிடித்துறைமுகத்தை குத்தகைக்கு வழங்கியதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இது தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் குற்றப்புலனாய்வு பொலிஸார் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.
நீதிமன்றத்திடம் அனுமதி கோரிய குற்றப்புலனாய்வு பொலிஸார்
எனினும், குறித்த வழக்கு தற்போதைக்கு இலஞ்ச, ஊழல் தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் விசாரணைக்கு எடுக்கப்பட்டதால், இந்த வழக்கை மீளப்பெற குற்றப்புலனாய்வு பொலிஸார் நீதிமன்றத்தில் அனுமதி கோரியிருந்தனர்.
இதனை தொடர்ந்து, கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதவான் கேமிந்த பெரேராவின் அனுமதியுடன் ராஜித சேனாரத்னவுக்கு எதிரான மோசடி வழக்கு மீளப்பெற்று கொள்ளப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணிலின் முதலாவது கூட்டத்தை புறக்கணிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் |