பிலிப்பைன்ஸ் புறப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரி
2022 சர்வதேச தலைமைத்துவ மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் பிரதான அழைப்பாளர் உரையை நிகழ்த்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று பிலிப்பைன்ஸின் மணிலா நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
பிரபஞ்ச சமாதான அமைப்பு நடத்தும் இந்த மாநாட்டில் 28 நாடுகளில் அரச தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொள்ள உள்ளனர். இந்த மாநாடு நாளையும் நாளை மறுதினமும் நடைபெறவுள்ளது.
கொரிய தீபகற்பத்தை ஒன்றிணைப்பதற்கான சமாதான செயற்பாடுகளுக்கு கலாசார அடித்தளத்தை இடுவது” என்ற தொனிப்பொருளில் இம்முறை மாநாடு நடைபெறுகிறது.
வெளிநாடுகளின் தலைவர்களை சந்திக்கும் முன்னாள் ஜனாதிபதி
இந்த சர்வதேச மாநாட்டில் கலந்துக்கொள்ளும் சில வெளிநாட்டுத்தலைவர்களை மைத்திரிபால சிறிசேன சந்திக்க எதிர்பார்த்துள்ளார்.
அத்துடன் இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு வெளிநாடுகளில் பெறக்கூடிய உதவிகள் தொடர்பாகவும் இதன் போது கவனம் செலுத்த உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.