விண்வெளியில் பால்வெளிக்கு வெளியே முதல் கோள் கண்டுப்பிடிப்பு
விண்வெளி கழகமான நாசாவின் சந்திரா எக்ஸ்-ரே தொலைநோக்கி மூலம் பால்வெளிக்கு வெளியே முதல் கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பூமி சூரியனை சுற்றுவதை போல புறகோள்கள் மற்ற நட்சத்திரங்களை சுற்றி வருகின்றன. அவை நாம் வாழும் பால்வெளி கெலக்சிக்கு உள்ளே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பால்வெளிக்கு வெளியே கோள் இருப்பதற்கான அறிகுறிகளை வானியல் வல்லுனர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது ஒருகோள் என்று கண்டுபிடிக்கப்பட்டால் பால்வெளிக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட முதல் கோளாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவின் விண்வெளி கழகமான நாசாவின் சந்திரா எக்ஸ்-ரே தொலைநோக்கி மூலம் இந்த கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது பால்வெளியில் இருந்து 2.8 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. கிட்டத்தட்ட சனி கிரகத்தின் அளவை கொண்டுள்ள இந்த புதிய கண்டுபிடிப்புக்கு எம் 51-1 என்று பெயரிடப்பட்டுள்ளது.