அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு குழந்தைகள் பலி
அவுஸ்திரேலியா - மெல்பன் தென் மேற்கிலுள்ள Werribee பகுதியில், வீடொன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் சிக்கி நான்கு பிள்ளைகள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
Mantello Drive-இலுள்ள வீடொன்றில் இன்று அதிகாலை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், தீயணைப்புப்படையினர் அங்கு வந்தபோது பெரியளவில் தீ பரவிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Arson and Explosives Squad detectives are investigating after four children perished in a house fire in Werribee this morning.
— Victoria Police (@VictoriaPolice) November 21, 2021
The exact cause of the fire is yet to be determined and the investigation is ongoing.
?https://t.co/W8t9QnFYnc pic.twitter.com/xRnw62kJsP
இதன்போது வீட்டின் மேற்கூரை முழுவதுமாக உடைந்துவிட்டதாகவும், தீயை கட்டுப்படுத்த 40 தீயணைப்பு வீரர்கள் போராட வேண்டியிருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இச்சம்பவத்தில் 10 வயது மற்றும் 3 வயதுடைய இரு ஆண் பிள்ளைகளும், 6 வயது மற்றும் 1 வயதுடைய இரு பெண் பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர்.
தீயிலிருந்து தப்பித்த பெற்றோரும், 8 வயதுச் சிறுவனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பிலும், இச்சம்பவம் சந்தேகத்திற்கிடமானதா என்பது தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri
