2022ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இறுதி வாக்கெடுப்பு
2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான (இறுதி) வாக்கெடுப்பு நாளை மாலை நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) தலைமையிலான கூட்டணி அரசின் 2022ஆம் நிதியாண்டுக்கான பாதீடு, நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவால் (Basil Rajapaksa) நவம்பர் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
நவம்பர் 13ஆம் திகதி முதல் 22ஆம் திகதிவரை 7 நாட்கள் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்று, 22ஆம் திகதி மாலை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதன்படி 2ஆம் வாசிப்பு மேலதிக 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆதரவாக 153 வாக்குகளும், எதிராக 73 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
அதன்பின்னர் நவம்பர் 23ஆம் திகதி முதல் அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை (மூன்றாம் வாசிப்பு) ஆரம்பமானது.
நாளை வெள்ளிக்கிழமை நிதி அமைச்சுக்கான ஒதுக்கீடு தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளது. இதன்போது பதிலளித்து உரையாற்றவுள்ள நிதி அமைச்சர் பாதீட்டில் திருத்தங்கள் செய்ய இருப்பின் அவை தொடர்பான அறிவிப்புகளை விடுப்பார். அதன்பின்னர் மாலை வாக்கெடுப்பு நடத்தப்படும்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 22 மணி நேரம் முன்

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
