முள்ளிவாய்காலில் அனர்த்தம் ஏற்படும் என்ற அச்சத்தை முன்பே நான் உணர்ந்தேன்: வீ. ஆனந்த சங்கரி

R. Sampanthan Mullivaikal Remembrance Day
1 மாதம் முன்

முள்ளிவாய்காலில் பெரும் அனர்த்தம் ஏற்படும் என்ற அச்சத்தை முன்பே உணர்ந்த நான், தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தனுக்கு பல தடைவை எச்சரித்திருந்தேன் என தமிழர் விடுதலை கூட்டணி தலைவர் வீ. ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.

தன்னால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கலந்து கொள்ள முடியாமை தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வில் கலந்துகொள்ள முடியாமைக்கு வருந்துகின்றேன். எங்கிருந்தாலும் எனது உணர்வுபூர்வமான பங்களிப்பு எப்போதும் உண்டு.

அன்று முள்ளிவாய்காலில் பெரும் அனர்த்தம் ஏற்படும் என்ற அச்சத்தை முன்பே உணர்ந்த நான், தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தனுக்கு பல தடைவை எச்சரித்திருந்தேன்.

அவற்றில் முக்கியமான சிலவற்றில் இருந்து ஒவ்வொரு பந்தியை மட்டும் இங்கே தந்துள்ளேன். நான் உண்மைகளை மறைப்பவன் அல்ல. தெரிந்த உண்மைகளை தயங்காமல் வெளியிடுபவன். இறுதி கட்டத்தில் விடுதலைபுலிகளின் தொலைபேசி அழைப்பை கூட ஏற்க மறுத்து அவர்களையும் மக்களையும் நட்டாற்றில் தவிக்கவிட்டமை மிகப் பெரிய துரதிஷ்டமாகும்.

முள்ளிவாய்காலில் அனர்த்தம் ஏற்படும் என்ற அச்சத்தை முன்பே நான் உணர்ந்தேன்: வீ. ஆனந்த சங்கரி | The Final Battle Of Mullivaikal

மேற்குறிப்பிட்ட கடிதத்தின் பகுதிகள் கீழ்வருமாறு.

1.“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்னியில் அகப்பட்டுள்ள அப்பாவி மக்களை காப்பாற்ற வேண்டும். அன்றேல் தங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை துறக்க வேண்டும்” என தமிழர் விடுதலைக் கூட்டணி அவர்களை வேண்டுகிறது என்ற தலைப்புடன் 11.01.2009 அன்று விடுத்த எனது அறிக்கையை படித்தது ஞாபகமில்லையா? நீங்கள் உடன் நடவடிக்கை எடுத்திருந்தால் அவர்களுக்கு தீங்கு விளைவிக்க எவருக்கும் சந்தர்ப்பம் கொடுக்காது காப்பாற்றியிருக்கலாம்.

2.“எமது மக்களைக் காப்பாற்ற கடைசி சந்தரப்பம்” என்ற தலைப்பில் 16.03.2009 அன்று தம்பி பிரபாகரனுக்கு எழுதிய கடிதத்தில் 87000 குடும்பங்களைச் சேர்ந்த 330000 மக்களின் சாபத்திற்கு ஆளாக வேண்டாமென எழுதியிருந்தேன். துரதிர்ஷ்டவசமாக அவர்களிடமிருந்து பதிலெதுவும் கிடைக்கவில்லை.

அது ஓர் ஆயுதம் தாங்கிய இயக்கம் ஆகையாலும் ரூபவ் அதன் உறுப்பினர்கள் பல்வேறு விதமாக இணைக்கப்பட்டமையாலும் அவர்கள் குறிப்பிட்ட சில நியதிகளுக்குட்பட்டு செயற்படுவார்கள் என நாம் எதிர்பார்க்க முடியாது. ஆகவே நான் அவர்களை குறைகூறவில்லை. ஆனால் நீங்கள் ஒரு தடவை முயற்சித்துப் பார்த்திருக்கலாம்.

3. 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆந்திகதி முன்னைய ஜனாதிபதியின் செயலாளர் அரசியற் கட்சித் தலைவர்களை நாட்டின் தற்போதைய நிலைபற்றி ஆராயவென 26ஆம் திகதி சந்திப்பு என அறிவித்திருந்தார். அந்த நேரத்தில் மிகப் பாரதூரமான விடயம் யாதெனில் யுத்தமும் தடுத்து வைக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களுமே! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இக்கூட்டத்தை பகிஷ்கரித்தது. நீங்கள் அன்று சமூகம் கொடுத்திருந்தால் பாதுகாப்பான இடங்களுக்கு இந்த மக்களை அழைத்துச் செல்லுமாறு ஜனாதிபதியிடம் வேண்டியிருக்கலாம்.

ஒருவிதமான பதவியுமில்லாமல் கூட்டணித் தலைவர் என்ற அந்தஸ்தை வைத்து இன்னும் வன்னியில் 85000 மக்கள்தான் அகப்பட்டுள்ளனர் என்று ஜனாதிபதி கூற நான் அதனை மறுத்துரைத்து 3 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று கூறியதும் ஜனாதிபதி கோபமாக உரத்துப் பேச என்னுடைய நிலைப்பாடு சரியென வற்புறுத்திக் கூறினேன்.

4. ஏப்ரல் மாதம் 10ஆந்திகதி இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஸ்ரீ. சிவசங்கர் மேனன் உங்களை உடனடியாக டெல்லி வருமாறு அழைத்தபோது வேறு 9 தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுடன் மாவை. சேனாதிராசா சந்தித்துப் பேசி யுத்த நிறுத்தம் செய்யாமல் இந்தியாவுக்குப் போக மாட்டோம் என தீர்மானித்து டெல்லிக்கும் தெரிவித்திருந்தனர்.

ஏப்ரல் 11ல் நான் எனது பத்திரிகை அறிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் இந்திய வெளிவிவகார அமைச்சின் அழைப்பை நிராகரிப்பது என எடுத்த தீர்வு முட்டாள் தனமானது மட்டுமல்ல எமது தேவைக்கு மிகவும் முரண்பட்டதாகும் எனத் தலையங்கமிட்டு அனுப்பியிருந்தேன்.

நீங்கள் அனைவரும் டெல்லிக்குச் சென்றிருந்தால் அல்லது நீங்களேனும் சென்றிருந்தால் அடித்துக்கூறுவேன் இந்திய அரசாங்கம் எமது மக்களைக் காப்பாற்ற ஒரு உறுதியான நடவடிக்கையை எடுத்திருக்கும். இப்படிச் செய்துவிட்டு இப்போது நீங்கள் யாரை குற்றம் சாட்டுகிறீர்கள்?

5. மே 2ஆந்திகதி இலங்கை ஜனாதிபதி அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளுடன் “உடனடியாக அப்பாவி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுவரப்படாவிட்டால் அது ஒரு பெரும் அனர்த்தத்தில் முடியும் என குறிப்பிட்டிருந்தேன்.

மேலும் அந்தக் கடிதத்தில் “அரசுக்கு ஏற்புடையதான ஒரு சர்வதேச அமைப்பை தெரிவுசெய்து வன்னிக்கு அனுப்பி விடுதலைப் புலிகளுடன் ஆலோசித்து இந்த மக்களை பாதுகாப்பாக வெளியேறுவதற்கு ஏதுவாக ஆயுதங்களைக் கையளிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க ஏதுவான நடவடிக்கைகளை எடுக்கும்படி வேண்டியதுடன் அதற்கு 2 வார அவகாசமும் கொடுக்கலாம் என வேண்டியிருந்தேன்.

ஜனாதிபதியால் கூட்டப்பட்ட கூட்டத்திற்குப் போவதற்கு உங்களுக்கு என்ன தடை இருந்தது? கலந்து கொண்டிருந்தால் சில நிபந்தனைகளுக்கு அமைய அவர்களுக்கு வசதி செய்யும்படி வற்புறுத்தியிருக்கலாம்.

6. நாடு ஒரு பெரிய அனர்த்தத்தை எதிர்நோக்கி இருப்பது தெரிந்தும் அதற்குரிய நடவடிக்கை எடுக்காமல் பிரித்தானிய நாடாளுமன்ற குழு வருகைதந்தபோது இந்தியப் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும் சில அனர்த்தங்கள் ஏற்படலாம் ஆகையால் அதை தடுக்க உதவுமாறு கோரிக்கை விடுத்தீர்கள், இதன் அர்த்தம் யாதெனில் நீங்களும் உங்கள் குழுவினரும் இந்தியத் தேர்தல் முடிந்ததும் ஒரு பாரிய அனர்த்தம் நடைபெறும் என அறிந்து வைத்திருந்தீர்கள், உங்கள் குழுவில் குறைந்தது 12 உறுப்பினர்களை வெளிநாட்டில் சுற்றுலாவுக்கு அனுப்பிவிட்டு இப்படியான ஒரு உரையை ஆற்றுவதற்கு வெட்கம் இல்லையா?

நான் தற்போது உங்களைக் கேட்க விரும்புவது யாதெனில் உங்கள் உறுப்பினர்கள் அனைவரினதும் தொலைபேசிகள் யுத்த கால இறுதி நாட்களில் இயங்கவில்லை என்ற கூற்று உண்மையா? இக் குறிப்பை முடிப்பதற்கு முன் பசில் ராஜபக்சக்கு நான் கூறியதாக அன்று கூடியிருந்த 22நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் என் முன்னே அவர் “இவர் சொல்லித்தான் மூன்று இலட்சத்துக்கு மேல் முள்ளிவாய்காலில் மக்கள் அகப்பட்டுள்ளதாக எனக்கு தெரிய வந்தது” என்று பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.  

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கனடா, Canada

04 Jul, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, பரிஸ், France

24 Jun, 2022
நன்றி நவிலல்

உருத்திரபுரம், மண்டைதீவு, Mönchengladbach, Germany, England, United Kingdom

05 Jun, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Ajax, Canada

03 Jul, 2022
நன்றி நவிலல்

Teluk Intan, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி மேற்கு, கிளிநொச்சி, Brampton, Canada

18 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், கோப்பாய், கொழும்பு, சிட்னி, Australia

05 Jul, 2020
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

07 Jul, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், Ilford, United Kingdom

05 Jul, 2017
மரண அறிவித்தல்

நுணாவில், சாவகச்சேரி, கந்தர்மடம், கொழும்பு, Toronto, Canada

04 Jul, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

07 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கன்பெறா, Australia

02 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Zürich, Switzerland

08 Jul, 2017
மரண அறிவித்தல்

சுன்னாகம், கொழும்பு, London, United Kingdom

17 Jun, 2022
மரண அறிவித்தல்

மன்னார், புதுக்குளம்

04 Jul, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், கன்பெறா, Australia

02 Jul, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

29 Jun, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

02 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, வவுனியா

04 Jul, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அரசடி

01 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Mississauga, Canada

01 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, London, United Kingdom

03 Jul, 2017
மரண அறிவித்தல்

நேரியகுளம், குருநகர், Chelles, France

27 Jun, 2022
மரண அறிவித்தல்

புத்தூர், அம்பனை, கொழும்பு

30 Jun, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், பம்பலப்பிட்டி, Vancouver, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்

அல்வாய், London, United Kingdom, சிட்னி, Australia

27 Jun, 2022
+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US