யுக்ரெனில் போரை தவிர்க்க இறுதி முயற்சி - அமெரிக்க ,ரஸ்ய தலைவர்கள் பேச்சு
யுக்ரென் பதற்றம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் இன்று சில மணி நேரத்தில் கலந்துரையாடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ரஸ்ய ஜனாதிபதி புட்டினுடன்,பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, யுக்ரென் மீதான பதற்றச் சூழ்நிலைக்கு மத்தியில்,நேர்மையான பேச்சுக்கள் பொருந்தாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளதாக ரொயட்டர் செய்திச்சேவை தெரிவித்துள்ளது.
யுக்ரேய்னில் எந்த நேரத்திலும் போர் மூளலாம் என்று எச்சரிக்கையின் மத்தியில், விரோதத்தை தவிர்ப்பதற்காகவே பைடனும், புட்டினும் பேச்சு நடத்தவுள்ளனர்.
இதற்கிடையில், அமெரிக்க யுக்ரெய்னில் இருந்து தமது தூதரக பணியாளர்களில் பெரும்பாலானோரையும், பொதுமக்களையும் வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது அதேபோன்று ஏனைய அவுஸ்திரேலிய, நியுஸிலாந்து, ஜேர்மனி, இத்தாலி மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளும் தமது குடிமக்களை யுக்ரெய்னில் இருந்து வெளியேறுமாறு கோரியுள்ளன.
இதேவேளை ,ரஸ்யா,யுக்ரெய்ன் மீது படையெடுத்தால், அங்குள்ள பிரித்தானிய பொதுமக்களை மீட்கும் வகையில் விமானங்களை பயன்படுத்தமுடியாதுஎன்று பிரித்தானிய ஆயதப்படைகள் அமைச்சர் துயஅநள ர்நயிpநல எச்சரித்துள்ளார்.
எனவே அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் யுக்ரெய்னில் இருந்து பிரித்தானிய பொதுமக்கள் வெளியேறவேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
எனினும், சுமார் ஒரு லட்சம் படையினரை யுக்ரெய்ன் எல்லையில் நிறுத்தியுள்ள ரஸ்யா, யுக்ரெய்ன் மீது ஆக்கிரமிக்கும் எண்ணம் இல்லை என்று தொடர்ந்தும் தெரிவித்து வருகிறது.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 6 மணி நேரம் முன்
இரட்டை குழந்தைகளுக்கு தந்தையானார் நடிகர் கவின்.. மகிழ்ச்சியில் வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்துகள் Cineulagam