துப்பாக்கி முனையில் குழந்தையை கடத்திய நபர் பொலிஸாரின் துப்பாக்கிசூட்டில் மரணம்
புதிய இணைப்பு
ஹொரணை பகுதியில் துப்பாக்கி முனையில் சிறுவன் ஒருவனை கடத்திச் சென்ற சந்தேகநபர், பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.
ஹொரணை − வெல்லம்பிட்டி பகுதியில் சிறுவனை மீட்க சென்ற பொலிஸாரை நோக்கி சந்நேகநபர் துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளார்.
இந்த நிலையில், பொலிஸார் நடத்திய பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்தில் சந்தேகநபர் உயிரிழந்துள்ளார்.
முதலாம் இணைப்பு
பாட்டியின் பாதுகாப்பில் இருந்த குழந்தையொன்று தந்தையால் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹொரணை கந்தானை பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குழந்தையின் தந்தையான ஹொரணை நீலகவினால் இந்த கடத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் கொலை உட்பட பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
ஹொரண நீலக என்ற சந்தேகநபர், குறித்த வீட்டிற்கு வந்து T-56 ரக துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு தனது குழந்தையை கடத்திச் சென்றுள்ளார்.
குறித்த நபர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கூரிய ஆயுதத்தால் தனது மனைவியின் கைகால்களை துண்டுத் துண்டாக வெட்டி பலத்த காயம் ஏற்படுத்தியிருந்தார்.
இச்சம்பவத்தின் பின்னர் அவரது குழந்தை மாமியாரின் பாதுகாப்பில் இருந்ததுடன் நாளை குழந்தைகள் பராமரிப்பு மையத்திற்கு மாற்றப்பட இருந்த நிலையிலேயே இவ்வாறு குழந்தை கடத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் ஹொரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 20 மணி நேரம் முன்

முத்து போட்ட ஸ்கெட்ச்.. சீதாவிடம் வசமாக சிக்கிய அருண்! சிறகடிக்க ஆசையில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam

ரஷ்யாவில் கொல்லப்பட்ட வட கொரிய வீரர்கள் குடும்பங்களுக்கு... கிம் ஜோங் உன் அளித்த உறுதி News Lankasri
