செட்டிகுளம் பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தந்தையை காணவில்லை
வவுனியா, செட்டிகுளம் சண்முகபுரம் பகுதியில் வசித்து வரும் 2 பிள்ளைகளின் தந்தையை காணவில்லை என அவரின் மனைவி செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளார்.
இ.நல்லநாதன் என்ற என்பவர் செட்டிகுளம் சண்முகபுரம் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து கடைக்கு செல்வதாக தெரிவித்து கடந்த வெள்ளிக்கிழமை ( 2021.02.05 ) சென்றுள்ளார்.
2 நாட்கள் கடந்தும் கணவன் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரின் மனைவியால் கணவனை காணவில்லை என தெரிவித்து செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தந்தையை காணாது அவரின் இரண்டு பிள்ளைகளும் உணவினை தவிர்த்து சோகத்தில் உள்ளனர்.
இவரை யாராவது கண்டால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது கீழேயுள்ள இலக்கத்திற்கோ அழைப்பினை ஏற்படுத்தி தெரியப்படுத்துமாறு பொது மக்களிடம் உதவி கோரப்பட்டுள்ளது.





கடும் நிதி நெருக்கடிக்கு நடுவில்.., யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற காய்கறி வியாபாரியின் மகள் News Lankasri

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri
