விவசாய நடவடிக்கையில் ஈடுபட்ட விவசாயிக்கு நேர்ந்த கதி
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மூங்கிலாறு கிராமத்தில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்ட விவசாயி ஒருவர் அரவம் தீண்டி உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
வயலில் விவசாய அறுவடைக்கு சென்றவேளை மூங்கிலாறு பகுதியினை சேர்ந்த குறித்த விவசாயி மீது அரவம் தீண்டியுள்ளது.
இதன்போது விவசாயி மயங்கி விழுந்த நிலையில் மூங்கிலாறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் மூங்கிலாறு கிராமத்தில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயிகள் உரப்பிரச்சினைக்கு மத்தியிலும் விவசாய செய்கையினை மேற்கொண்டு பல
கஸ்டங்களை அனுபவித்து வந்த நிலையிலும் அறுடை செய்யும் போது குறித்த விவசாயி
அரவம் தீண்டி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



