உறவினர்களுடன் சுற்றுலா சென்ற கோவிட் தொற்றால் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பம்
வவுனியாவில் கோவிட் தொற்றுடன் தனிமைப்படுத்தப்பட்டிருந்த குடும்பமொன்று உறவினர்களுடன், சுற்றுலா சென்றுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து, குறித்த குடும்பத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளதாக சுகாதாரப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் வசிக்கும் 5 பேர் கொண்ட குடும்பம் ஒன்றில் ஒருவருக்கு கடந்த 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து குறித்த குடும்பம் வசித்து வந்த பண்டாரிக்குளம் பகுதியில் அமைந்திருந்த வீடு கடந்த 22 ஆம் திகதி முதல் 14 நாட்களுக்கு சுகாதாரப்பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டிருந்தது.
இருப்பினும், சுகாதாரப்பிரிவினருக்கு அறிவிக்காது குறித்த குடும்பத்தினர் கோவிட் தொற்றாளருடன் இணைந்து வெளிநாட்டில் இருந்து வருகை தந்த தமது உறவினர்களுடன் சுற்றுலா சென்றுள்ளதாக சுகாதாரப்பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து, சுகாதாரப்பிரிவினர் அவர்களது வீட்டிற்கு சென்றிருந்தனர்.
அங்கு கோவிட் தொற்றாளர் மற்றும் அவருடன் இணைந்து தனிமைப்படுத்தப்பட்ட எவரும் இருக்கவில்லை.
இதனால், குறித்த குடும்பத்தினருக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறை மீறிலின் கீழ் பொலிசார் ஊடாக வவுனியா நீதிமன்றில் வழங்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த குடும்பத்தினர் தற்போது உள்ள பகுதியில் அவர்களை தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரப்பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 மணி நேரம் முன்

உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam

காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri

துபாயில் சிறையில் இருந்து விடுதலையான 19 வயது பிரித்தானிய இளைஞர்: லண்டன் சாலையில் சோகம் News Lankasri
