இலங்கையின் இரண்டாவது நீர்வீழ்ச்சியின் சூழல் பாதுகாக்கப்பட வேண்டும்

Water fall
By Independent Writer Feb 15, 2021 09:56 AM GMT
Report

இலங்கையில் சுற்றாடலை மேம்படுத்தும் பல்வேறு வேலைத்திட்டங்கள் இலங்கை அரசினால் கடந்த காலம் முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இருந்தும் நமது நாட்டுக்கு வருகின்ற உல்லாச பயணிகள் விரும்பக்கூடிய சுற்றுலா மையங்கள் பல நமது நாட்டில் காணப்படுகின்றது.

அந்தவகையில் இலங்கையில் காணப்படுகின்ற நீர்வீழ்ச்சிகளுக்குத் தனி ஒரு பெருமையுள்ளது. அனைவரும் விரும்பக்கூடிய பல நீர்வீழ்ச்சிகள் இலங்கையில் ஈரவலய பிரதேசங்களான மலையக பிரதேசத்தை உள்ளடக்கியே இவை காணப்படுகின்றன.

இதன் அடிப்படையில் ஊவா மாகாண பதுளை மாவட்டத்தில் காணப்படுகின்ற நீர்வீழ்ச்சிகள் உலக வரைபடத்திலும் கூட சிறந்து விளங்குகின்றது. அதி உயரமான நீர்வீழ்ச்சிகளை இலங்கையில் பார்ப்போமேயென்றால் அதிக முக்கிய பங்கை ஊவா மாகாணத்தில் பதுளை மாவட்டம் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதுளை மாவட்டத்தில் பண்டாரவளை கொஸ்லந்தை பிரதேச சபைக்குட்பட்ட கொஸ்லந்தை வெல்லவாய பிரதான வீதியில் அமையப்பெற்றுள்ள தியலும நீர்வீழ்ச்சி இலங்கையின் இரண்டாவது அதி உயரம் கொண்ட நீர்வீழ்ச்சி என யாவரும் அறிந்த விடயம். இந்த நீர்வீழ்ச்சியானது 722 அடி உயரமான நீர்வீழ்ச்சியாகும்.

இந்த நீர்வீழ்ச்சியினை பார்வையிடுவதற்கு உள்நாட்டு, வெளிநாட்டு உல்லாச பயணிகள் அதிகமாக வந்து செல்வது ஒரு சிறப்பம்சமான விடயமாகும். பண்டாரவளை பூனாகலை பிரதேசத்திலிருந்து பெருக்கெடுத்து வரும் ஆற்றின் நீர் தியலும நீர்வீழ்ச்சியின் ஊடாக வழிந்தோடுகின்றது.

வற்றாத நீர்வீழ்ச்சியாகப் பெருமை கொண்டுள்ளது இந்த தியலும நீர்வீழ்ச்சி. ஈரவலப்பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சியைப் பலரும் பிரதான வீதியிலிருந்தே கண்டு இரசிக்கின்றனர். ஆனால் இந்த நீர்வீழ்ச்சியின் உயரப் பகுதியில் சிறப்பு மிக்க அம்சங்களைக் காணமுடியும் என்பது பலரால் உணரப்பட்டுள்ளது.

ஆகையால் இந்த நீர்வீழ்ச்சியின் உயரப்பகுதிக்கு உள் நாட்டவர்களும், வெளிநாட்டவர்களும் செல்வது இன்றைய காலகட்டத்தில் அதிகமாகக் காணப்படுகின்றது. அங்கே உயரத்திலிருந்து வேறு பிரதேசங்களை அவதானிக்கக் கூடிய ரம்மியமான காட்சிகளைக் காணக்கூடிய பல சந்தர்ப்பங்கள் உண்டு.

கொஸ்லந்தை பிரதேச சபையின் ஊடாக பராமரிக்கப்பட்டு வரும் இந்த தியலும நீர்வீழ்ச்சியின் உச்ச பகுதி அசுத்தமான சூழ்நிலை கொண்டுள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது.

இதற்கு பிரதான காரணம் அங்கே நீர்வீழ்ச்சியின் உச்சத்திற்குச் செல்வோர் சூழலை மாசடையும் வகையில் அவர்களின் செயல்பாடுகள் காணப்படுவதாகக் கண்டறியப்படுகின்றது.

வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் சூழலுக்குப் பங்கம் விளைவிக்காது பராமரிப்பதாகவும், உள்நாட்டுப் பயணிகள் சூழலை மாசுபடுத்தும் வகையில் செயல்படுவதாகவும் குற்றம் சுமத்தப்படுகின்றது.

இந்த நீர்வீழ்ச்சியின் உச்சப் பகுதியில் சமைத்து உணவு உண்கின்றார்கள், ஆனால் சமைக்கும் பொருட்களையும் அங்கு இடப்படுகின்ற கற்களாலான அடுப்புகளையும் அகற்றுவதில்லை.

அடிவாரத்திலிருந்து கொண்டு செல்லும் பொருட்களை ஆங்காங்கே வீசி செல்கின்றனர். எஞ்சிய உணவுகளை வீசிவிடுகின்றனர். அதனால் துர்நாற்றங்கள் ஏற்படுகின்றது. அங்கு வளர்ந்துள்ள கற்றாளைச் செடிகளில் பெயர்களைப் பதித்து அச்செடிகளை நாசமாக்குகின்றனர்.

மது பாவித்து போத்தல்களை உடைத்து மாசுபடுத்துகின்றனர். அங்கு மரங்கள் வெட்டப்படுகின்றது. அதனூடாக தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்படுகின்றது. அக்கூடாரங்களில் சமூக விரோத செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர்.

குறிப்பாகப் பெண்களை அழைத்துச் செல்வோர் அங்கு தேவையற்ற செயல்களில் ஈடுபடுவதாகக் குற்றம் சுமத்தப்படுகின்றது. ஆங்காங்கே அமைக்கப்படுகின்ற கூடாரங்கள் அகற்றப்படுவதில்லை.

இதுபோன்ற விடயங்களால் அந்த நீர்வீழ்ச்சியின் உச்ச பகுதி மாசுபடும் அளவிற்கு மோசமான நிலையைக் கொண்டுள்ளது. இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு இந்த விடயம் கொண்டு செல்லப்படும் நிலையில் நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்ற கேள்வி எழும்பியுள்ளது.

எனவே கொஸ்லந்தை பிரதேச சபை இது குறித்துக் கவனத்திற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடப்பட்டுள்ளது.  

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

நாட்டு நடப்பு | சிறப்பு நேரலை

4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US