அம்பிகையின் உண்ணாவிரத போராட்டத்தின் இறுதி நிமிடங்களில் நடந்தது என்ன? - நேரடி ரிப்போர்ட்
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கான சர்வதேச நீதி கோரி பிரித்தானியாவில் அம்பிகை செல்வகுமார் முன்னெடுத்த அகிம்சைவழி உண்ணாவிரதப்போராட்டம் நேற்று மாலை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
பிரித்தானிய அரசிடம் 4 அம்சக்கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி அவற்றில் ஒன்றையேனும் நிறைவேற்றினால் போராட்டத்தை கைவிடுவேன் என்று 17 நாட்கள் பசித்திருந்த அம்பிகை கோரிக்கைகளில் ஒன்று முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளுமாறு பிரித்தானிய அரசாலும், பாராளுமன்ற உறுப்பினர்களாலும் அனைத்து தமிழ் மக்களாலும் கேட்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அவர் போராட்டத்தை நிறைவு செய்திருந்தார்.
அம்பிகை அவர்களின் போராட்டத்தின் சில பதிவுகளும், போராட்டத்தின் இறுதிக் கணங்களில் அவர் வழங்கியிருந்த விசேட செவ்வியும் :