யாழில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தயை நோக்கிப் பாய்ந்த நாய் சுட்டுக்கொலை (Video)
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நாய்
யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறைப் பகுதிக்கு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தனிப்பட்ட விஜயம் மேற்கொண்ட போது அவரது மெய்ப்பாதுகாவலரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி நாய் ஒன்று உயிரிழந்துள்ளது.
யாழ். மாவட்டத்துக்கு விஜயம் செய்திருந்த இராஜாங்க அமைச்சர் தனது நண்பர் ஒருவரைச் சந்திப்பதற்காக வல்வெட்டித்துறைக்குச் சென்றிருக்கின்றார்.
அங்கு வளர்ப்பு நாயொன்று இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தயைக் கண்டதும் குரைத்ததுடன் அவரை நோக்கிப் பாய்ந்துள்ளது.
நாய் உயிரிழப்பு
அதன்போது இராஜங்க அமைச்சரின் மெய்ப்பாதுகாவலர் அந்த நாய் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளார்.
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான குறித்த நாய் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
இராஜாங்க அமைச்சரின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த மெய்ப்பாதுகாவலர் இந்தத் துப்பாக்கிச்சூட்டை நடத்தியதால் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் இல்லை எனக் கூறப்படுகின்றது.
மேலதிக தகவல் - கஜி
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் திருவிழா





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 8 மணி நேரம் முன்

பாகிஸ்தான் உளவுத்துறையுடன் ரகசிய தொடர்பு., இந்தியாவின் DRDO விருந்தினர் இல்ல மேலாளர் கைது News Lankasri

மளிகைப்பொருட்கள்: கனடாவுக்கும் இந்தியாவுக்கும் என்ன விலை வித்தியாசம்? ஒரு வைரல் வீடியோ News Lankasri

நேற்று முதல் மனைவியுடன் நிகழ்ச்சி, இன்று மாதம்பட்டி ரங்கராஜ் 2வது மனைவி செய்த வேலையை பாருங்களே... Cineulagam
