தலதா மாளிகையின் தியவதன நிலமே பதவிக்கு கடும்போட்டி! ஆறுபேர் களத்தில்
தலதா மாளிகையின் தியவதன நிலமேயாக இருந்த நிலங்க தேலபண்டாரவின் பதவிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில் புதிய தியவதன நிலமே போட்டிக்கு ஆறுபேர் களத்தில் குதித்துள்ளனர்.
தலதா மாளிகையின் தியவதன நிலமேயாக இருந்த நிலங்க தேலபண்டார தனது 20 வருட பதவிக் காலத்தை நிறைவு செய்துள்ளார்.
புதியதொரு தியவதன நிலமே தெரிவு செய்யப்படும் வரை அவர் தொடர்ந்தும் பதில் தியவதன நிலமேயாக கடமையாற்றிக் கொண்டிருக்கின்றார்.
புதிய தியவதன நிலமே
எனினும் புதிய தியவதன நிலமேயைத் தெரிவு செய்வதற்கான வேட்பு மனுக் கோருவதற்கான திகதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை.
அதற்குள்ளாக தியவதன நிலமே பதவிக்குப் போட்டியிடுவதற்காக தற்போதைக்கு ஆறுபேர் களத்தில் குதித்துள்ளனர்.
பெரும்பாலும் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னதாக புதிய தியவதன நிலமே ஒருவரைத் தெரிவு செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




