பதவி நீக்கம் ஏமாற்றம் அளிக்கின்றது! - விவசாய அமைச்சின் முன்னாள் செயலாளர்
தனது நேரத்தையும், உழைப்பையும், அறிவையும் அர்ப்பணித்த பின்னரும் பதவி நீக்கம் செய்யப்பட்டமை ஏமாற்றம் அளிப்பதாக விவசாய அமைச்சின் முன்னாள் செயலாளர் உதித் கே ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார்.
“தான் பதவி நீக்கம் செய்யப்பட்டமைக்கான காரணம் குறித்து தனக்கு தெரியாது என்றும், இந்த நடவடிக்கை குறித்து எழுத்துப்பூர்வமாக தமக்கு இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும் கூறினார்.
நாட்டில் நிலவும் நெருக்கடியின் காரணமாக உடனடி உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்ற அறிவிப்பை வெளியிட்ட சிறிது நேரத்திலேயே அவர் விவசாய அமைச்சின் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
அவரது கருத்துக்கள் தான் அவரை பதவி நீக்கம் செய்ய வழிவகுத்ததா என வினவியபோது, தற்போதுள்ள நிலைமையை முழுமையாக புரிந்து கொள்ளாதவர்களுக்கு இந்த அறிக்கை சர்ச்சைக்குரியது என்று தெரிவித்துள்ளார்.
அறிவியல் எச்சரிக்கை மற்றும் முன்யோசனையுடன் செயல்பட்டால் நாடு உணவு நெருக்கடியை சமாளிக்க முடியும்.
உணவுப் பற்றாக்குறை குறித்து பேசுவது அரசின் கொள்கையை மீறும் செயல் அல்ல என்றும் அவர் கூறினார்.
மேலும், இரசாயனத்திலிருந்து கரிம உரத்திற்கு மாறுவது 100 வீதம் சாத்தியமில்லை என்றும் திரு.ஜெயசிங்க குறிப்பிட்டார்.

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
