கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பில் இதுவரை தீர்மானம் எடுக்கப்படவில்லை: சாகர காரியவசம் - செய்திகளின் தொகுப்பு
ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பில் இதுவரை உறுதியான தீர்மானம் ஏதும் எடுக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், கொள்கை அடிப்படையில் இரு தரப்பிற்கும் இடையில் வேறுபாடுகள் காணப்படுகின்றன.
தனித்து போட்டியிட வேண்டும் என பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைக்கு எதிராகவே மக்கள் கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலிலும், 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்கி, பொதுஜன பெரமுன தலைமையிலான பலமான அரசாங்கத்தை ஸ்தாபித்தார்கள் என சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதியநேர செய்திகளின் தொகுப்பு,

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
