ஜனாதிபதி எடுத்துள்ள முக்கிய முடிவு : செய்திகளின் தொகுப்பு
யுகதனவி மின்னுற்பத்தி நிலைய ஒப்பந்தம் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும்(Gotabhaya Rajapaksha) அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுக்கும் இடையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின்(Mahinda Rajapaksha) பங்களிப்புடன் தீர்க்கமான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு தொடர்பில் கொழும்பு ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் யுகதனவி உடன்படிக்கையில் மேற்கொள்ளப்படக் கூடிய திருத்தங்கள் மற்றும் தேவைப்பட்டால் அந்த மாற்றங்களை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து அறிக்கையளிக்குமாறு ஜனாதிபதி நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம்(Basil Rajapaksha) கோரிக்கை விடுத்தார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது தமிழ்வின்னின் இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,