கோட்டாபய எடுத்த தீர்மானம்! தடை ஏற்படுத்தியவர்களால் இன்று நாட்டுக்கு ஏற்பட்டுள்ள நிலை
விமல் வீரவன்ச அமைச்சராக இருந்த அமைச்சரவை எடுத்த தீர்மானங்களினால் தான் நாடு வங்குரோத்துக்கு சென்றது என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்றைய(18.07.2023) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பொருளாதார மீட்சிக்கு தேவையான சிறந்த திட்டங்களையும், மறுசீரமைப்புக்களையும் முன்னெடுத்துள்ளோம்.
அனைத்துக்கும் தடையாக இருந்தார்கள்
பொருளாதார முன்னேற்றத்துக்காக அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானங்களை விமர்சிக்கும் தரப்பினர் நெருக்கடியான சூழ்நிலையில் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை, மாற்றுத்திட்டங்களை முன்வைக்கவில்லை.விமர்சனங்களை மாத்திரம் முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
விமல் வீரவன்ச அமைச்சராக இருந்த அமைச்சரவை எடுத்த தீர்மானங்களினால் தான் நாடு வங்குரோத்துக்கு சென்றது. அப்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச உலக நடப்புக்கு ஏற்ப தீர்மானம் எடுக்க முயற்சித்த போது இவர்கள் தான் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்துக்கும் தடையாக இருந்தார்கள். ஆனால் தற்போது மக்கள் மத்தியில் சென்று ஏதும் அறியாதது போல் கதைக்கிறார்கள்.
பொருளாதார மீட்சிக்கான சிறந்த திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளோம். பொருளாதார பாதிப்பில் இருந்து நாடு வெகுவிரைவில் முன்னேற்றமடையும். ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன் ஊழல் ஒழிப்புக்கான நடவடிக்கைகள் வெளிப்படைத் தன்மையுடன் முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |