முடிவு ஜனாதிபதி ரணில் கையில்-அழுத்தங்களை கொடுப்பதில்லை என மகிந்த முடிவு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று நடந்துள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பேச்சுவார்த்தையில் அரசாங்கம் மேற்கொள்ள உள்ள அமைச்சரவை மாற்றங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் போது யாருக்கு அமைச்சு பதவிகளை வழங்க வேண்டும் என ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதியிடம் வினவியுள்ளார்.
அமைச்சர்களை நியமிப்பதில் அழுத்தங்களை கொடுக்க மாட்டேன்

இதற்கு பதிலளித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, “நான் ஜனாதிபதிகளுக்கு ஆலோசனை வழங்கும் ஆலோசகர் அல்ல. கோட்டாபய ஜனாதிபதியாக இருந்தார். அவர் அமைச்சர்களை நியமித்தார்.
இன்னாரை அமைச்சராக நியமிக்குமாறு நான் எந்த சந்தர்ப்பத்திலும் அழுத்தங்களை கொடுக்கவில்லை. அதேபோல் எந்த சந்தர்ப்பத்திலும் யாருக்கு அமைச்சு பதவிகளை வழங்க வேண்டும் என்று நான் உங்களுக்கும் எந்த அழுத்தங்களையும் கொடுக்க மாட்டேன்” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பாய் சொல்லும் நடிகர் பிரபாஸ்- மனைவிக்காக என்ன செய்துள்ளார் பாருங்க... Cineulagam