கொரோனாவால் உயிரிழந்தவர் பூந்தோட்டத்தில் தகனம் செய்யப்பட்டார்
மன்னார் பொது வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் -19 நோயால் உயிரிழந்தவரின் சடலம் வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள நகர சபையால் பராமரிக்கப்பட்டுவரும் மின் மயானத்தில் இன்று தகனம் செய்யப்பட்டது.
இருதய நோயாளியான அவர் மன்னார் பொது வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றுமுன்தினம் காலை உயிரிழந்தார்.
மன்னார் உப்புக்குளத்தைச் சேர்ந்த 61 வயதுடைய இஸ்லாமியர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.
அவரது மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்திய நிலையில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பொலிசார் மற்றும் சுகாதார அதிகாரிகளின் பிரசன்னத்துடன் இன்று (21) பிற்பகல் 12 மணியளவில் அவரது உடல் வவுனியாவில் எரியூட்டப்பட்டது.
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
ட்ரம்பின் முற்றுகை ஒரு பக்கம்... 34 எண்ணெய்க் கப்பல்களை சாமர்த்தியமாக வெளியேற்றிய ஈரான் News Lankasri
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam