உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு
நாடாளுமன்றில் அரசாங்கத்தின் பெரும்பான்மையை நீக்குவதற்கான எதிர்க்கட்சியின் முயற்சிகளில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 100க்கும் 113க்கும் இடைப்பட்ட மதிப்பீடுகள் மாறுபட்டு வருகின்றன. எனினும் தற்போது எதிர்க்கட்சிக்கு 101 பேர் நாடாளுமன்றில் உள்ளனர்.
எதிர்வரும் நவம்பரில் வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தின்போது இது தமக்கு பாதகமாக அமைந்து விடக்கூடாது என்று அரசாங்கம் எண்ணுகிறது.
அரசாங்கத்தின் முயற்சி
சர்வக்கட்சி அரசாங்க பேச்சுக்களும் தோல்வியடைந்து வருவதால், பல நாடாளுமன்ற உறுப்பினர்களை தன் பக்கம் இழுக்கும் முயற்சிகளையும் அரசாங்கம் இரட்டிப்பாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எவ்வாறாயினும், நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான நடவடிக்கை மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் அங்கீகரிக்கப்பட வேண்டும். இது சாத்தியமில்லை என்ற நிலையில், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு எதிர்க்கட்சிகள் மும்முரம் காட்டத் தொடங்கியுள்ளன.
உள்ளூராட்சி தேர்தல்
உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்கள் சட்டத்தில் உள்ள விதிகளின்படி 2022 செப்டெம்பர் 20, பின்னர் எந்த நேரத்திலும் தேர்தலை நடத்துவதற்கு முடியும் என்று வாதத்தை எதிர்கட்சிகள் முன்வைத்து வருகின்றன.
2022ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவேடு அக்டோபர் 31ஆம் வரை திகதியே இறுதிச்செய்யப்படவுள்ளது. அதற்கு முன் தேர்தலை அறிவித்தால், 250.000 இளைஞர்கள் தேர்தலில் பங்கேற்கமுடியாது போகும்.
எனவே தேர்தலை நடத்த நிலைமை வாய்ப்பளிக்குமானால், அதற்கான திகதி எதிர்வரும் நவம்பரிலியே அறிவிக்கப்படும் வாய்ப்புள்ளது என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


சுடலைக்கழிவு அரசியல்? 1 நாள் முன்

கனடாவுக்குள் நுழைய புலம்பெயர்வோருக்கு இலவச டிக்கெட்கள்?: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri

வெளிநாட்டவர்கள் ஜேர்மன் குடியுரிமை பெறுவதை எளிதாக்கும் ஒரு விசா... சில பயனுள்ள தகவல்கள் News Lankasri

உளுந்து வடையில் நடுவில் ஓட்டை இருப்பதற்கு இதுதான் காரணமாம்! இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே Manithan

விஜய்யின் பூவே உனக்காக பட புகழ் நடிகையா இது? இரண்டாவது திருமணம் செய்து எப்படி உள்ளார் பாருங்க Cineulagam
