விமான நிலையத்தின் ஊடாக நாட்டை ஊடுறுவப் போகும் பேராபத்து
விமான நிலையங்கள் ஊடாக நாட்டிற்குள் கோவிட் வைரஸ் பிரவேசிக்கும் அபாயம் உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து உடனடி கவனம் செலுத்தி முறையான வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் தெரிவிக்கையில்,
இலங்கையில் கோவிட்-19 தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு, நாட்டில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாட்டில் பலர் சுகாதார ஆலோசனைகளை புறக்கணிப்பதை நாம் பார்த்திருக்கிறோம். உலக சுகாதார நிறுவனமும் (WHO) எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
தற்போது பெருமளவான உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் நாட்டுக்கு வருகைத் தந்த வண்ணம் உள்ளனர், வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் நாட்டுக்கு பல பொதிகளை அனுப்பி வைக்கின்றனர்.
விமான நிலைய கட்டமைப்பை மீறிச் செயற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு தொற்று நிலை ஏற்படும் ஆபத்து உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
Making Video: கூடவே வாழ்ந்த மாதிரி பேசுறீங்க... சுதா கொங்கராவிற்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்! Manithan
12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri