தமிழீழ மக்களின் சாபமே இலங்கையின் இன்றைய நிலைக்கு காரணமாக உள்ளது: விஜயகாந்த்
இலங்கையில் இனப்படுகொலை செய்யப்பட்ட போது தமிழீழ மக்கள் ஒவ்வொருவரின் வயிறு எப்படி எரிந்ததோ, அந்த சாபம் தான் இன்றைக்கு இலங்கையே தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கின்றது என தமிழக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் மகிந்த ராஜபக்ச பதவி விலகியது தொடர்பில் விஜயகாந்த் தமது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக வன்முறை வெடித்துள்ள நிலையில் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகியுள்ளார்.
ஒரு இனத்திற்காக போராடிய விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை இரக்கமற்ற முறையில் கொலை செய்ததுடன், பெருமளவான மக்களையும் கொலை செய்து, மிக கொடூரமாக நடந்து கொண்ட ராஜபக்சவிற்கு கிடைத்த மிகப்பெரிய தண்டனையாக இது அமைந்துள்ளது.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு செய்த கொடுமைகளுக்காகவும், அப்பாவி தமிழர்களை கொடூரமாக கொன்றதற்காகவும் ராஜபக்ச குடும்பத்திற்கு மிகப்பெரிய தண்டனையாக தான் இதைப்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நேற்றைய தினம் தான் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், மற்றும் அவருடன் உயிரிழந்த அனைத்து தமிழீழ மக்களின் ஆன்மா சாந்தி அடைந்திருக்கும்.
மேலும் அவர்களுக்காக பிரார்த்தனை செய்வோம் என தெரிவித்துள்ளார்.


இலங்கையின் முதல் கரிநாள்...! 4 நிமிடங்கள் முன்

இயக்குனர் அட்லீயின் அம்மா, அப்பாவை பார்த்துள்ளீர்களா?- பிரபலத்துடன் அவர்கள் எடுத்த ஸ்பெஷல் போட்டோ Cineulagam

2ஆம் எண்ணில் பிறந்தவர்களா நீங்கள்? இவ்வளவு தனிச்சிறப்பா உங்களுக்கு! இது தான் உங்கள் பலவீனம் Manithan
