தற்போதைய சுகாதார நெருக்கடி! வலுப்பெற்று வரும் கோரிக்கை
தற்போதைய சுகாதார நெருக்கடி மற்றும் பொறுப்பான அமைச்சரின் பதவி விலகல் கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன.
கடுமையான பற்றாக்குறையை சமாளிக்க நடவடிக்கை
இந்தநிலையில், பொது மருத்துவமனைகளில் தற்போதைய கடுமையான பற்றாக்குறையை சமாளிக்க அத்தியாவசிய மருந்துகள் மற்றும் பிற மருத்துவ பொருட்களை கொள்வனவு செய்வதற்கு சுகாதார அமைச்சகம் கட்டளைகளை அனுப்பியுள்ளது.
அவசரநிலை அறிவிப்புகள் என வகைப்படுத்தப்பட்ட குறைந்தபட்சம் பதின்மூன்று கொள்முதல் அறிவிப்புகள், உலக வங்கியின் நிதியுதவியுடன் கூடிய சுகாதார அவசர நிதி வசதியின் வெளியிடப்பட்டுள்ளன.

2023 ஆகஸ்ட் 15 அன்று ஏலம் மூடப்படும் என்ற குறுகிய அறிவிப்புடன் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.
இதன்படி, தைரொக்ஸின், எட்டெனோலோல், அமிட்ரிப்டைலைன், சோடியம் வோல்ப்ரோயேட்,
சல்பூட்டமால், சல்பூட்டமால் சுவாசக் குப்பி, ப்ராப்ரானோலோல், ஓலான்சாபைன்,
நிஃபெடிபைன் ஈஆர், ஹைட்ரோகுளோரோதியாசைட், ஃப்ளூக்செடின்
எச்.சி.எல் ஆகிய மருந்துகளுக்கு கேள்விப்பத்திரங்கள்
கோரப்பட்டுள்ளன.
தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
முத்துவை அசிங்கப்படுத்திய சீதா, நீதுவால், ரவி-ஸ்ருதி இடையே வெடித்த பெரிய பிரச்சனை... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam