பிரித்தானியாவின் தற்போதைய கோவிட் நிலவரம்!
பிரித்தானியாவில் கோவிட் வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், 2,445பேர் பாதிக்கப்பட்டதோடு 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் கோவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஏழாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை 4,414,242 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 127,502 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 76,397 பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 208 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 4,210,343 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.
இதேவேளை, பிரித்தானியாவில் 34 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தற்போது கோவிட் வைரஸ் தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்றுள்ளதாகவும், 14 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் இரண்டாவது டோஸை பெற்றுக்கொண்டுள்ளதாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
நேற்றைய தினம் 134,140 பேருக்கு முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இதன்படி, மொத்தம் 34,094,048 பேருக்கு முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 462,885 பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன்படி, மொத்தம் 14,043,961 பேருக்கு இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. .