அமேசான் நிறுவுனருடன் விண்வெளிக்கு சென்ற குழுவினர் பூமி திரும்பினர்
அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ் உட்பட நால்வரை ஏற்றிச்சென்ற தனியார் விண்கலம் வெற்றிகரமாக விண்வெளியை அடைந்து மீண்டும் பூமியில் தரையிறங்கியுள்ளது.
57 வயதான ஜெப் பெஸோஸுடன் (Jeff Bezos) அவரின் சகோதரர் மார்க் பெஸோஸ் (Mark Bezos 53), 82 வயது பெண்ணான வெல்லி பங்க் (Wally Funk ), 18 வயது மாணவன் ஒலிவர் டேமன் (Oliver Daemen)ஆகியோரும் விண்வெளிக்கு பயணித்தனர்.
ஜெப் பெஸோஸுக்கு சொந்தமான புளூ ஓரிஜின் எனும் தனியார் விண்வெளி நிறுவனம் தயாரித்த நியூ ஷெப்பர்ட் எனும் விண்கலம் மூலம் இக்குழுவினர் விண்வெளிக்குச் சென்றனர்.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள தனியார் விண்வெளி ஏவுதளத்திலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை இந்த விண்கலம் ஏவப்பட்டது.
பூமியிலிருந்து 100 கிலோமீற்றர் உயரத்தில் (தூரத்தில்) உள்ள இடம் விண்வெளியின் ஆரம்பமாக பொதுவாக கருதப்படுகின்றது.
நியூ ஷெப்பர்ட் (New Shepard)) விண்கலம் ஏவப்பட்டு 2 நிமிடங்களில் அந்த இலக்கை அடைந்து மேலும் உயரே சென்றது.
அதில் இருந்தவர்கள் சுமார் 4 நிமிடங்கள் புவியீர்ப்பு விசையற்ற நிலையை அனுபவித்தனர். ஏவப்பட்டு 11 நிமிடங்களின் பின்னர் அவ்விண்கலம் மீண்டும் பூமிக்குத் திரும்பியது.
விண்வெளிக்கு மனிதர்களை அழைத்துச்சென்ற 2 ஆவது தனியார் நிறுவனம் புளூ ஓரிஜின் அகும், பிரித்தானிய கோடீஸ்வரர் ரிச்சர்ட் பிரான்சனின் விண்வெளி சுற்றுலா நிறுவனமான வர்ஜின் கேலக்டிக் தயாரித்த ரொக்கெட் விமானம் மூலம் ர் ரிச்சர்ட் பிரான்சன், இந்தியவம்சாவளி பெண் சிரிஷா பண்ட்லா உள்ளிட்ட 6 பேர் கடந்த 11 ஆம் திகதி விண்வெளிக்குச் சென்று வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பியை குறிப்பிடத்தக்கது.