பிரித்தானியாவின் கோவிட் நிலவரம்! - வெளியாகியுள்ள புதிய தரவுகள்
மிக அண்மைய புள்ளிவிவரங்களின்படி, இங்கிலாந்தில் மேலும் 33,865 கோவிட் வழக்குகள் மற்றும் 293 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கடந்த சில வாரங்களில் நாளாந்த கோவிட் வழக்குகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 9,130,857 பேர் கோவிட் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 140,964 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 1,563,807 பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 1,030 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன் வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக 7,426,086 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதனிடையே, பிரித்தானியாவில் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றவர்களின் சமீபத்திய எண்ணிக்கை (நவம்பர் 1 வரை) 8,356,172 ஆக உள்ளது, அதே நேரத்தில் 45,731,565 பேர் இரண்டு அளவுகளையும் பெற்றுள்ளனர்.
சுமார் 50,025,020 பேர் கோவிட் தடுப்பூசியின் குறைந்தது ஒரு அளவு மருந்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.
திங்களன்று 9,538 பேர் கோவிட் தொற்றுடன் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இந்த எண்ணிக்கை ஒரு மாதத்திற்கு முன்பு 6,467 ஆக இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.