நாடு யாசகம் கேட்கும் நாடாக மாறும் - ராஜித சேனாரத்ன
இலங்கையின் பொருளாதாரம் இந்த ஆண்டின் இறுதியில் வீழ்ச்சியடையும் எனவும் நாடு வங்குரோத்து நிலைமையை அடைந்து யாசகம் கேட்கும் நாடாக மாறும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன(Rajitha Senaratna) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
நாடு பொருளாதார ரீதியாக பாரியளவில் வீழ்ச்சியடையும் போது எந்த பொருளையும் இறக்குமதி செய்ய முடியாத நிலைமை ஏற்படும்.
அரசாங்கத்தின் தோல்வியான அரச நிர்வாகம் காரணமாவே இலங்கை, உலகில் மோசமான நாடாக வீழ்ச்சியடைந்துள்ளது.
உலகில் வீழ்ச்சியடைந்து வரும் நாடுகள் இடையில் இலங்கை முதலிடத்தில் உள்ளது என அரசாங்கத்தின் கூட்டணி கட்சியான லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண(Tissa Vitharana) கூறியுள்ளதாகவும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
