கட்டுப்பாடுகளுடன் நாளை திறக்கப்படும் இலங்கை
நாளை தினம் சில கட்டுப்பாடுகளின் கீழ் நாடு திறக்கப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய மக்கள் செயற்பட வேண்டும். அலுவலக பணிக்காக குறைந்தபட்ச எண்ணிக்கையிலான ஊழியர்களே பணிக்கு அழைக்கப்பட வேண்டும். வீட்டில் இருந்து பணி செய்ய கூடியவர்கள் அவ்வாறே பணி செய்ய அனுமதிக்க வேண்டும்.
பொது போக்குவரத்து சேவையில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு மாத்திரமே பயணிகள் பயணிக்க வேண்டும். அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாயமாகும். தனிமைப்படுத்தல் சட்டத்திற்கான ஏனைய சட்டங்களை அதே முறையில் பின்பற்ற வேண்டும்.
மாகாணங்களுக்கு இடையில் பயணக்கட்டுப்பாடு தொடர்ந்து அமுலில் இருக்கும். அதற்கமைய விசேட காரணங்களுக்கமைய மாத்திரமே மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க வேண்டும்.
சுற்றுலா பயணங்கள், மத சம்பந்தமான யாத்திரைகள் போன்றவற்றிற்கு செல்ல அனுமதி வழங்கப்படாது. பொது இடங்களில் மக்கள் ஒன்றுக்கூட கூடாது.
நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு நாளை அதிகாலை 4 மணிக்கு நீக்கப்பட்டு எதிர்வரும் 23ஆம் திகதி இரவு 10 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும். அதனை தொடர்ந்து எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு மீண்டும் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படும்.

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

ரஷ்யா, சீனாவுடன் ஆயுதப்போட்டி ஏற்படும் அச்சம்: அதிர்ச்சியூட்டும் உத்தரவை பிறப்பித்த செயலாளர் News Lankasri
